;
Athirady Tamil News

பாடசாலைகளில் AI பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதித்த ஐரோப்பிய நாடு

0

நோர்வே அரசு, தொடக்கப்பள்ளி மாணவர்கள் (வயது 6013) செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளது.

பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, “பள்ளிகளில் குழந்தைகள் முதலில் வாசிக்க, எழுத, கணிதம் கற்றுக்கொள்ள வேண்டும். AI கருவிகள் இவற்றை புறக்கணிக்கச் செய்யும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்

புதிய விதிமுறைகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் கல்வியாண்டிலிருந்து அமுல்படுத்தப்படுகின்றன. தொடக்கப்பள்ளிகளில் AI முற்றிலும் தடை செய்யப்படும் நிலையில், 14-16 வயது மாணவர்கள் ஆசிரியர் கண்காணிப்பில் மட்டுமே AI கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

17-19 வயது மாணவர்கள், எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்குத் தயாராக AI-ஐ சரியான முறையில் கற்றுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

கல்வித் தரம் குறைவடைந்ததால், 2024-ல் நோர்வே அரசு பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களைத் தடை செய்தது. இப்போது AI-க்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், டேப்லெட்டுகளின் பயன்பாட்டை குறைத்து, புத்தகங்களை மீண்டும் வகுப்பறைகளில் அதிகப்படுத்தும் சட்ட முன்மொழிவையும் அரசு கொண்டு வர உள்ளது.

அதேபோல், குழந்தைகள் 16 வயது வரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.