;
Athirady Tamil News

வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

0

வவுனியா, நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர பாடசாலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமுதாய மேம்பாட்டு சேவை அடிப்படையாக ஒவ்வொரு வருடமும் 16 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகினறது அந்தவகையில் இந்த வருடத்துக்கான ஐந்தாவது திட்டமாக வவுனியா வடக்கு வலயத்தின் நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக சிஐசி விவசாய வியாபார நிறுவனத்தின் சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிறுவனததால் ஒவ்வொரு வருடமும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடி நீர்திட்டத்தை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்களின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக இம்முறை இப் பாடசாலையிலும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில் சிஜசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வருண மடவனராச்சி, வவுனியா பிரதேச வெயலாளர் இ.பிரதாபன், மற்றும் பாடசாலை அதிபர், வவுனியா வடக்கு வலயக்கல்வி திணைக்களத்தினர், சிஐசி குழுமத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், இந்த வருடத்திற்கான ஆறாவது திட்டமாக முல்லைத்தீவு ஐயங்குளம் மகாவித்தியாளய மாணவர்களுக்கு சிஐசி விவசாய வியாபார நிறுவனத்தின் சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.