;
Athirady Tamil News

பிரான்ஸ் அதிபர் மனைவியை முத்தமிட முயன்ற டிரம்ப்; புகைப்படத்தின் உண்மை பின்னனி

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானை (Brigitte Macron) வலுக்கட்டாயமாக முத்தமிட நெருங்குவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் வெர்சாய்ஸ் (Versailles) அரண்மனையில் நடைபெற்ற ஒரு சர்வதேச அரசுமுறை விருந்தின் போது இந்த அசவுகரியமான சம்பவம் நடந்ததாகக் கூறி, எக்ஸ் (X) தளம் மற்றும் ஃபேஸ்புக்கில் லட்சக்கணக்கானோர் இதனைப் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

போலியானது
இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது. சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு (Fact Check) அமைப்புகள் இந்த வைரல் புகைப்படத்தை ஆழமாக ஆய்வு செய்ததில், இது முற்றிலும் போலியானது மற்றும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிஜிட் மேக்ரான் இடையே அண்மையில் நடைபெற்ற சந்திப்புகளின் போது இத்தகைய எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அந்தப் படம், நவீன செயற்கை நுண்ணறிவு (AI Generated) தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அல்லது போட்டோஷாப் மூலம் டிஜிட்டல் முறையில் போலியாக உருவாக்கப்பட்டு, வேண்டுமென்றே தவறான தகவலுடன் பரப்பப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.