யாழ். நயினாதீவு படகு விபத்தில் பலியான அதிபரின் மகன் படைத்த சாதனை
நயினாதீவு கடலில் மரணித்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப்பெற்றுள்ளார்.
இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கடலில் உயிரிழந்தார்.
பரீட்சை பெறுபேறுகள்
இது இவ்வாறு இருக்கையில் கஜவர்சன் சிறந்த பெறுபேற்றினை பெற்று தனது தந்தை – தாய்க்கும், பாடசாலைக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
வடக்குமாகாணம் அதன்படி, வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீத மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
மொத்தமாக 566 மாணவர்கள் அனைத்து 9 பாடங்களிலும் (9A) சித்தி பெற்று சிறப்புச் சாதனை படைத்துள்ளனர்.