;
Athirady Tamil News

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையாக திட்டிய பராக் ஒபாமா!

0

ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஈரான் நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் சிஸ்டரும் அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.

கடந்து நான்கு மாதங்களாக நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

டிரம்ப் வெளியேறியதால்தான் அணுசக்தி திறனை ஈரான் அதிகரித்தது
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹார்மூஸ் நீரிணையை திறப்பது உள்ளிட்ட பல அம்சங்களும் இடம்பெற்றிருக்கிறது. ஏனெனில் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் கடல் வழிதடமான ஹார்மூஸை ஈரான் மூடியதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.

தற்போது போர் முடிவுக்கு வந்திருப்பது இரண்டு இரண்டு நாடுகளிலும் வசிக்கும் மக்களிடம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதேநேரம் ஈரான் மீது துவங்கிய போரால் அமெரிக்க 29 டாலர் பில்லியன் செலவு செய்திருக்கிறது .

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ‘தற்போது ஒரு போரை நடத்தி பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து ஏகப்பட்ட உயிர்களையும் இழந்திருக்கிறோம்.

இவ்வளவு இழந்தும் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட ஒரு மோசமான இடத்திற்கு வந்து நிற்கிறோம்

. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என ஏற்கனவே ஒரு நல்ல ஒப்பந்தம் இருந்தது. டிரம்ப் நிர்வாகம் அதிலிருந்து வெளியேறியதால்தான் அணுசக்தி திறனை ஈரான் மேலும் அதிகரித்தது என கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.