;
Athirady Tamil News

Hanta வைரஸ் ; சொகுசு கப்பலில் இருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு

0

‘MV Hondius’ என்ற சொகுசு கப்பலில் ஹன்டா (Hanta) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 18 அமெரிக்கர்கள், 42 நாட்களுக்குப் பிறகு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சொகுசு கப்பலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் காரணமாக 18 அமெரிக்கப் பிரஜைகள் பாதிக்கப்பட்டு, நெப்ராஸ்கா மருத்துவ மையத்தில் (Nebraska Medical Center) தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் 42 நாட்கள் தொடர் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, தற்போது அவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ‘MV Hondius’ கப்பலில் ஏற்பட்ட இந்த வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் மூலம் அமெரிக்காவில் தற்சமயம் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.