;
Athirady Tamil News

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

0

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை நேற்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தெரிவிக்க முடியும்.

சுற்றுச்சூழல் பிரச்சினை
இந்தத் தகவல்கள் பரிமாற்றச் செயன்முறையில், ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தச் செயன்முறை ஊடாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகவும் துல்லியமான, விஞ்ஞானபூர்வமான மற்றும் விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.

களமட்டத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உடனடியாக அறிவிப்பதற்கும், சூழல் நட்பு ரீதியான புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக அதிகாரிகளுக்குப் பகிர்ந்து கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.