;
Athirady Tamil News

கிரிப்டோ கரன்சி மூலம் 1.4 பில்லியன் டாலர் வருமானம் பெற்ற டிரம்ப்!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரிப்டோ கரன்சி வணிகங்கள் மூலம் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு நெறிமுறைகள் அலுவலகம் வெளியிட்ட 927 பக்க நிதிநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில்,

அதிபராவதற்கு முன்பே பெரும் செல்வம் சேர்த்துவிட்டேன்
‘நான் ஏன் லாபம் ஈட்டுகிறேன் என்று உங்களுக்கு தெரியும் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் உள்ளது, எனவே அனைவரும் லாபம் சம்பாதிக்கிறார்கள். என்னிடம் அதிக பணமும் ரொக்கமும் இருப்பதால் எனக்கும் லாபம் கிடைக்கிறது என்றார்.

அதிபர் பதவியை பயன்படுத்தி லாபம் ஈட்டுவதாக கிளம்பியுள்ள விமர்சனம் குறித்து , ‘அதிபராவதற்கு முன்பே நான் தொழிலதிபராக பெரும் செல்வம் சேர்த்துவிட்டேன். தனது தனிப்பட்ட முதலீடுகளை, தான் நேரடியாக நிர்வகிப்பதில்லை.

பெரிய நிதி நிறுவனங்களே, தனது பணத்தை முதலீடு செய்கின்றன. அந்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம், தான் பேசுவதே இல்லை.

வெள்ளை மாளிகையில் தனது முதல் ஆண்டில் தொடங்கப்பட்ட கிரிப்டோ முயற்சிகளுடன் அந்த வருமானம் தொடர்புடையதாக இருந்தபோதிலும், தனது வருவாய் முந்தைய தொழில் வாழ்க்கையின் மூலமே கிடைத்தது அரசியல் அல்லது வணிகம் – இதில் எது எனக்கு சிறந்த பணிவாழ்வை அளித்தது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் வணிகத்தில் நான் சிறப்பான ஒரு வாழ்க்கையை கொண்டிருந்தாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.