;
Athirady Tamil News

ஹோர்முஸ் அமெரிக்காவின் ஒரு பகுதி – டிரம்ப் அறிவிப்பு

0

வாஷிங்டன்,

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை இனி அமெரிக்காவின் ஒரு பகுதி என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் தற்போது மோதல்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இரு நாடுகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. அதே வேளையில் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

ஹோர்முஸ் ஜலசந்தி தங்களது கட்டுபாட்டில் உள்ளதாகவும் இருதரப்பும் கூறி வருகின்றன. இதற்கிடையே அந்த ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக ஈரான் – ஓமன் இடையே நடந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியானது.

இந்தநிலையில், வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் ஜலசந்தியை வட்டமிட்டு, இது அமெரிக்காவின் ஒரு பகுதி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிவிட்டுருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் மறுத்து வரும் நிலையில் மேப் ஒன்றை தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை அமெரிக்கா நிறைவேற்றாதவரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.