ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை!
ஹெட்ஃபோன் அணிந்து பாடல்களைக் கேட்டுக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது இனிவரும் காலங்களில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சாலையைப் பயன்படுத்தும் போது சுற்றுப்புறச் சூழலை அவதானிக்க முடியாத நிலை ஏற்படுவதால், விபத்துகளின் அபாயம் அதிகரிப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், ஹெட்ஃபோன் அணிந்தபடி சாலையில் பயணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தேவையெனில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலைகளைப் பயன்படுத்தும் போது போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, ஹெட்ஃபோன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.