இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அதில் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கும் போது,
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது, குறித்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்து திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது
பிரதேச செயலக மட்டத்தில் காணப்படும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் வேலைத்திட்டங்கள், சமுர்த்தி வேலைத் திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
