;
Athirady Tamil News

வெனிசுலாவில் தொடரும் துயரம்.. உயரும் பலி எண்ணிக்கை..!

0

கராகஸ்,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதன்படி தற்போது பலி எண்ணிக்கை 2,954 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிலநடுக்கத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், நிலநடுக்கத்தால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுமார் 50,000 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் லத்தீன் அமெரிக்கா கண்டம் கண்ட மிக மோசமான நிலநடுக்க பேரிடர்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இதனிடையே நிலநடுக்கங்கள் ஏற்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 942 பின் அதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.