;
Athirady Tamil News

பரிசு பெற்றது குற்றமா….வைர மோதிரத்தால் டிரம்புக்கு வந்த சிக்கல்!

0

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறைபதவியேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதுடன், அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் ட்ரம்புக்கு பரிசாக கிடைத்த ஒரு வைர மோதிரம் அவருக்கு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. டொனால்ட் ட்ரம்புக்குபெல்ஜியம் வைர நிறுவனம் ஒன்று கைக்கடிகாரம் அளவுள்ள ஒரு தங்க மோதிரத்தை சமீபத்தில் பரிசாக கொடுத்தது.

உலக வைர மையத்தின் தலைவர் இசிடோர் மோர்செல் பெல்ஜியத்திற்கான அமெரிக்க தூதரிடம் இந்த மோதிரத்தை வழங்கினார். 300க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் பதித்த இந்த மோதிரத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.33 லட்சம் என சொல்லப்படுகிறது.

ஆனால் பரிசுகளை ஏற்றுக் கொள்வதை தவிர்க்கும் வெள்ளை மாளிகையின் மரபை டொனால்ட் டிரம்ப் மீறி விட்டதாக எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.