நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையை அடுத்து பெருமளவான கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன் கண்ணீருடன் கதறி அழும் புகைப்படங்க்கள் சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது .