சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் ; நீதிமன்றம் வழங்கிய அனுமதி ; இணையும் CCD, CID
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் பின்னணி, அதற்கான காரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்புகள் குறித்து இரு விசாரணைப் பிரிவுகளும் இணைந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.