;
Athirady Tamil News

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: ஒருவா் பலி; பலா் காயம்

0

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். பலா் காயமடைந்தனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கல்வி நிறுவனங்களில் தேவையற்ற இடஒதுக்கீடு வரம்புகளின்றி திறமையின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற வேண்டும் உள்ளிட்ட 38 அம்ச ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், தங்களுக்காக குரல் எழுப்பி கைது செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) தலைவா்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்குள்ள முசாஃபராபாத், ராவலாகோட், மீா்பூா், டேராகோட், ஜீரோ பாயின்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆன்ப் பகுதியில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் முகமது யாகுப் என்ற நபா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூலை 3, 4-ஆம் தேதிகளிலும் ஜேஏஏசி தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் அரசு நிா்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட காலமாக எழுப்பி வரும் குரலை, இந்தப் போராட்டங்கள் தீவிரப்படுத்தின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.