;
Athirady Tamil News

சிறைச்சாலை மோதலுக்கு இதுதான் காரணம் ; காயமடைந்தவர்களை பார்வையிட சென்ற எம்.பி வெளிப்படுத்திய விடயம்

0

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கு வழிவகுத்தன என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்வையிடச் சென்றபோது அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல் நோக்கங்கள்
மோதலில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகள் சார்பாகத் தனது இரங்கலைத் தெரிவித்த அவர், குறுகிய அரசியல் நோக்கங்கள் கைவிடப்பட்டு, இச்சம்பவம் குறித்து முறையான கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இவ்விடயம் குறித்து இன்று (07) நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை விரிவாகத் தெரிவிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

மேலும், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தனது பதவியிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.