;
Athirady Tamil News

கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் சோதனையில் அம்பலமான விடயம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை

0

கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருந்தின் சிற்றுண்டிச்சாலை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக விலை
அநுராதபுரம் தொடருந்து நிலையத்தில், அதிகாரிகளால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, 120 ரூபாய் எனக் குறிக்கப்பட்ட ஒரு போத்தல் குடிநீர் 150 ரூபாய்க்கு விற்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து நுகர்வோரிடம் அதிக விலை வசூலித்த சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.