;
Athirady Tamil News

பணம் தூய்தாக்கல் தடை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

0

இன்று பாராளுமன்றத்தில் பணம் தூய்தாக்கல் தடை திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது .

பாராளுமன்றத்தில் பணம் தூய்தாக்கல் தடை திருத்தச் சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் திருத்தச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான இன்றைய விவாதத்தை தொடர்ந்து வாக்களிப்பு நடத்தப்பட்டது .

வாக்கெடுப்பில் அரசாங்க தரப்பில் 154 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்.பியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. இதன்படி அந்த சட்டமூலம் மூன்றில் இரண்டுக்கும் அதிமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.