மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம் – 12ஆவது வாரமாக இன்றும் தொடர்ந்தது
;
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தனர்.