சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்களின் பங்களிப்புடன் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டன.குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று இவ்விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் நுளம்பு பெருக்கத்துக்கு சாதகமான சூழல்கள் என்பன ஆய்வு செய்யப்பட்டன.
நுளம்பு பெருக்கம் காணப்பட்ட மற்றும் சுகாதார குறைபாடுகள் பதிவான பாடசாலைகளுக்கு உடனடி சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், அவற்றை சீரமைப்பதற்கான அவகாசமும் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு டெங்கு நோய் தடுப்பு, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் நுளம்பு பெருக்கம் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.
