நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.
சிறைச்சாலை மோதல்
சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.