;
Athirady Tamil News

ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

0

ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அத்துடன், ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது, அமெரிக்க ராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசி அதைச் செயலிழக்கச் செய்துள்ளது.

அதேநேரம், ஈரானின் பொதுமக்களுக்கான சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ,பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உட்கட்டமைப்புகள் முற்றிலும் அழியும் வகையில் மிகக் கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் “முக்கிய உட்கட்டமைப்புகள்” மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், அமெரிக்க ஆட்சியாளர்களின் குற்ற நோக்கத்தைக்” காட்டுகின்றன என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.