;
Athirady Tamil News

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: மேலும் 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

0

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 34 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 420 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 416 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பாசி மணி ஒன்று
130வது பிற சான்றுப் பொருளாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.