;
Athirady Tamil News

EPF சேவைகள் இடைநிறுத்தம் ; வெளியான அறிவிப்பு

0

தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (EPF) தொடர்பான பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொதுச் சேவைகள்
இந்த பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலப்பகுதியில், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர் சேமநிதி தரவு அமைப்பு மற்றும் டிஜிட்டல் இபிஎஃப் அமைப்பு (Digital EPF System) ஆகியவற்றுடன் தொடர்புடைய சேவைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த இரண்டு நாட்களிலும் உதவித்தொகை வழங்குதல், பதிவுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பெற முடியாது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தங்களுக்கு உரிய தொழிலாளர் அலுவலகத்திற்கு வருகை தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.