;
Athirady Tamil News

கனடா, ஐஸ்லாந்து நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டும் வரைபடம்: டிரம்ப் பதிவு

0

கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை டொனால்ட் டிரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவற்றை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டுவது போன்ற ஒரு வரைபடத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

இந்த வார இறுதியில், டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் சுமார் 100 செய்திகள் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த நிலையில், இந்த விசித்திரமான வரைபடமும் அந்தப் பதிவுகளில் அடங்கும்.

இந்தப் புதிய வரைபடப் பதிவு குறித்து பதிலளித்த ஐஸ்லாந்து, அந்தப் படம் முற்றிலும் பொருத்தமற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அமெரிக்கத் தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (செப். 8) தெரிவித்தது.

அந்த வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் அமெரிக்கக் கொடியால் வண்ணமிடப்பட்டிருந்தது.

டிரம்ப் வெளியிட்ட பதிவில், முழு நிலப்பரப்பும் “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” என்று பெயரிடப்பட்டு, வேறு எந்த விளக்கமும் இன்றி பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.