;
Athirady Tamil News

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

0

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்! வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.

இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.

திருடர்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.