;
Athirady Tamil News

பிள்ளைகளின் கல்வியே நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும்

0

பிள்ளைகளின் கல்வியே குடும்பத்தின் எதிர்காலத்தையும், எமது சமூகத்தின் முன்னேற்றத்தையும், நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் புலமைப்பரிசில் என்பது ஒரு நிதியுதவி மட்டுமல்ல, உங்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு மதிப்புமிக்க அங்கீகாரம். இதனை உங்கள் எதிர்கால வெற்றிகளுக்கான முதல் படியாகக் கருதி, விடாமுயற்சியுடன் கல்விப் பயணத்தைத் தொடருங்கள்.

நீங்கள் பெறும் கல்வியே உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும், எமது சமூகத்தின் முன்னேற்றத்தையும், நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும்.

புலமைப்பரிசில் பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகி, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த குடிமக்களாக உயர வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.