;
Athirady Tamil News

இந்தியா உள்பட 20 நாடுகளின் மருந்து நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு; அமெரிக்கா அறிவிப்பு

0

நியூயார்க்

இந்தியா உள்பட 20 நாடுகளின் மருந்து நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அமெரிக்கா அறிவித்து உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் கஜானாவை நிரப்புவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி கனடா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான அளவில் வரிகளை விதித்து அமல்படுத்தினார். இதனால், கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதித்தன.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும், உள்நாட்டு நிறுவனங்கள் முன்னேற்றம் காணவும், கஜானாவை நிரப்பும் நோக்கிலும் இந்த வரிகள் விதிக்கப்பட்டன என டிரம்ப் அரசு தெரிவித்தது. இது இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது.

100 சதவீத வரி விலக்கு
இதேபோன்று, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் உயர்தர மருந்துகளுக்கு 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கூடுதல் வரியை ரத்து செய்து அமெரிக்க வர்த்தக துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அரிய வகை நோய்கள் மற்றும் குறிப்பிட்ட உபபொருட்கள், மலட்டுத்தன்மை சிகிச்சை, கால்நடை சுகாதார மருந்து பொருட்கள் மற்றும் மரபணு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்தும்.

அதேசமயம், வழக்கமான ‘ஜெனரிக்’ எனப்படும் பொதுவான மருந்துகள் மற்றும் காப்புரிமை பெற்ற சில இறக்குமதி பொருட்களுக்கும் இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கான ஒப்பந்த அடிப்படையிலான இந்த அறிவிப்பால் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா மற்றும் 19 நாடுகளுக்கு, இந்த சிறப்பு வரி விலக்கானது அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.