டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய்
முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் நந்தனம் வரை பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.
பயணிகளுடன் எவ்வளவு நேரத்திற்கு ஒரு ரயில் வருகிறது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
பயணிகள் முதல்வர் விஜய் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மூதாட்டி ஒருவர், முதல்வர் விஜய்யின் கையில் முத்தமிட்டு தோளில் சாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
நந்தனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்றார். அங்கு அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
அங்கிருந்து காரில் கிண்டி கத்திப்பாரா சென்ற முதலமைச்சர் விஜய், பூந்தமல்லி ரோட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கிருந்து போரூர் சென்று, போரூர் முதல் பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஆளில்லா மெட்ரோ ரயிலிலும் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.