;
Athirady Tamil News

ஜேர்மனியை வாட்டிய வரலாறு காணாத வெப்பம்: 10000ஐ தொட்ட உயிரிழப்பு எண்ணிக்கை

0

ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது.

10,000-ஐ தொட்ட உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் (RKI) என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளில், இந்த ஆண்டு அதிகமான வெப்பத்தில் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை கடந்த கால உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 9800 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் மட்டும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாகும்.

ஜூன் காலக்கட்டத்தில் ஜேர்மனியின் வெப்ப அலை சில பகுதிகளில் 42°C (107.6°F) வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை பதிவான இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு பதிவான 9000 என்ற அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையை முந்தியுள்ளது.

ஜூன் 22 முதல் 28ம் திகதி வரை பதிவான உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட 32% அதிகமாகும்.

ஜூலை 19 க்கு பிந்தைய வெப்ப நிலைகள் மற்றும் உயிரிழப்புகள் இன்னும் இதில் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் பதிவான தீவிரமான வெப்ப அலையில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.