;
Athirady Tamil News

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)

0

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)
##########################

கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின் பிறந்தநாள் வைபகம் வன்னி எல்லைக் கிராமமொன்றில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் சிறுவர் சிறுமியர் தொடக்கம் பெரியோர், வரை கலந்து சிறப்பித்து கேக் வெட்டி பாட்டிசைத்து கொண்டாடினர்.

கனடாவில் வசிக்கும் செல்வன்.சங்கீத் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் சிறுவர் பெரியோர் வரை ஒன்றுகூடலில் இனிமையாக மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட, லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் வழித்தோன்றல்களில் ஒருவரான இந்திரன் என அழைக்கப்படும் கனடாவில் வதியும் திரு.திருமதி. ஆபிரகாம்லிங்கம் கவிதா தம்பதிகளின் மூத்த புதல்வனான “செல்வன்.சங்கீத்” அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் மிக மகிழ்ச்சியாக பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.. தொடர்ந்து சங்கீர்த்தின் பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது

செல்வன்.சங்கீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கீத்தின் பெற்றோர்களான திரு.திருமதி ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் கனடாவில் வசிக்கும் சங்கீத் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வவுனியா பூவரசன்குளம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு கனடாவில் வசிக்கும் சங்கீத் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வவுனியா பூவரசங்குளம் மாதர்சங்க தலைவி கலைச்செல்வி குமரேசன் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

இன்றைய நாளில் பிறந்த நாளினைக் கொண்டாடும் சங்கீத் அவர்களின் பெற்றோர் வழங்கிய நிதிப் பங்களிப்புக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக உறவுகளுடன் இணைந்து நன்றி கூறுவதோடு சங்கீத் அவர்கள் பல்கலையும் கற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது. அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், தாயக உறவுகளுடன் இணைந்து இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
04.08.2026

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ)

 


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. 

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.