ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள் – சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்
;
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் .
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் பல பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்னர். அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கிறார்கள்.
யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.
எனவே சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும் என தெரிவித்தார்.