;
Athirady Tamil News

உடலில் கடுமையான எரிச்சல் ; ஒரு மாதமாக நீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்! விசித்திர சம்பவம்

0

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் விசித்திர சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு நீரில் முழ்கியபடி வாழ்ந்து வருகிறான்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
நீரிலிருந்து வெளியே வந்தவுடனே தனது உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோவொரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டது போன்று உணர்வதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதன் காரணமாகவே சிறுவன் குளத்திலிருந்து வெளியேற மறுத்துத் தொடர்ந்து தண்ணீரிலேயே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. உடல் பருமனாக இருக்கும் இக்பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்களில் மிதந்தபடி காணப்படுகிறான்.

சில நேரங்களில் சிறுவன் ஒரு குளத்திலிருந்து மற்றொரு நீர்நிலைக்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிறுவனின் இக்கட்டான நிலை குறித்து அவனது பெற்றோர் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுவனை ஏற்கனவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அவனது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாகத் தண்ணீரிலேயே இருந்து வருவதால் இக்பாலின் கை மற்றும் கால்களில் உள்ள தோல்கள் வெளிறிய நிலைக்கு மாறியுள்ள போதிலும், சிறுவன் தண்ணீரை விட்டு வெளியே வரத் தொடர்ந்து மறுத்து வருகிறான்.

சிறுவன் நீண்ட நேரம் தண்ணீரிலேயே இருப்பதால் தோலின்கீழ் பூஞ்சைத் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.