;
Athirady Tamil News

யாழில். நீதியின் ஓலம் ஆரம்பம் – திங்கள் மாபெரும் பேரணி

0
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகியது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத்தூபிக்கு  மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

செம்மணி புதைகுழிக்கு நீதிகோரி நேற்றைய  தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்த போராட்டம், எதிர்வரும், 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெற்று , 17ஆம் திகதி யாழ். நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்து , பேரணியாக ,நல்லூர் கோயில் வீதியிலுள்ள ஐநா அலுவலகத்தில் சென்று மகஜர் கையளிப்பதோடு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.