;
Athirady Tamil News

ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – மற்றொருவர் மாயம்

0

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.

நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி
அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய மீரிகம பகுதியை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல்போன மற்றைய நபரை தேடும் பணியில் மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.