யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு , குறித்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.ஆர். ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் “சேவா வனிதா” திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் புதிதாக வீடொன்றினை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல்லினை , இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி நாட்டி வைத்தார்.
அதனை தொடர்ந்து வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று , அவை நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த வீட்டினை யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்கவினால், இராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.