கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, புதன்கிழமை (19) மாலை 5:30 மணி வரை அமுலில் இருக்கும்.
பாதிக்கப்பட்ட கடற்பரப்புகளில் 2.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேருவலையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த பகுதிகளில் செயற்படும் கடற்படையினரும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.