வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த கடன் திட்டத்திற்கு சில அடிப்படைத் தகுதிகளை கெண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்
அதன்படி, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருப்பதுடன் பொதுச் சாதாரண பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) 25 வயதிற்கு கூடாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் – கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.