முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரர் கைது
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மீன் விற்பனை மையங்களை நிறுவி பராமரிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கைகளில் முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 முதல் 2012 வரை சிலோன் மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.