சுவிஸ்சில் இருந்து நாடு திரும்பிய கிளிநொச்சி இளைஞன் புலனாய்வு துறையினரால் கைது
சுவிஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பிய கிளிநொச்சி இளைஞன் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சுவிஸ் சென்று அங்கு தஞ்சம் கோரிய நிலையில் நாடு திரும்பிய கிளிநொச்சியைச் சேர்ந்த கேரூபின் (வயது 30) என்ற இளைஞன் அரச புலனாய்வுத் துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 2026 ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், மீண்டும் குறித்த இளைஞர் அரச புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மீள உருவாக்கம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.