யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது.
பேருந்து பயணியால் துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
வீதியில் சென்றவர் மீது பட்ட எச்சில்
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.
இன்னிலையில் பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.