;
Athirady Tamil News

எல் நினோ காலனிலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்!

0

தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், அதிக வெப்பத்தால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற எல் நினோ நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எல் நினோ நிலைமை
சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் விவசாயிகள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்தி, வெளிர் நிற ஆடைகளை அணிந்து, தலையை மூடிக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாணவர்கள் தேவையற்ற வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்த்து நிழலான இடங்களில் இருக்க வேண்டும் என்றும், பாடசாலை முடிந்து செல்லும்போது குடை அல்லது தலையை மூடும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.