;
Athirady Tamil News

5 நிமிடங்கள் குளித்த இந்திய பெண்ணிற்கு ரூ.1.3 லட்சம் அபராதம்

0

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர், குளியலின் போது எழுந்த நீராவியால் கட்டிடத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அவருக்கு 1,800 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.30 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

“யாருக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்று பாருங்கள்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அதில் நடந்த சம்பவத்தை அந்த பெண் விவரிக்கிறார். அவர் குளியலை முடித்து வெளியே வந்தபோது திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்ததாக கூறினார்.

இதனால் என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், ஆரம்பத்தில் அது தீ விபத்து ஒத்திகையாக இருக்கலாம். என்று அவர் நினைத்தாராம். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கட்டிட மேலாளர் அவரது வீட்டிற்குள் வந்தார். தான் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற உதவவே மேலாளர் வந்திருப்பதாக அந்த பெண் நினைத்துள்ளார். ஆனால் அலாரம் ஒலித்ததால்தான் அவர் வந்திருக்கிறார் என்பதை பிறகு உணர்ந்திருக்கிறார் என்பதை பிறகு உணர்ந்துகொண்டார்.

அந்த பெண் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே குளித்திருந்தாலும் எக்ஸாஸ்ட் பேன் எனப்படும் காற்றை வெளியேற்றும் விசிறியை அவர் இயக்கவில்லை. அதனால் ஏற்பட்ட அதிகப்படியான நீராவிதான் அலாரத்தை தூண்டியிருக்கலாம் என்று அந்த பெண் கூறுகிறார். மேலும் யார் குளியலறைக்கு வெளியே தீ எச்சரிக்கை அலாரத்தை வைப்பார்கள்? என்று அவர் அந்த வீடியோவில் கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சில பயனர்கள் அந்த லாரத்தின் உணர்திறன் மற்றும் அது பொருத்தப்பட்ட இடம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.