;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் முடங்கிய திராட்சை வர்த்தகம்

0

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் இந்த ஆண்டு திராட்சை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவதால், முக்கிய வர்த்தக எல்லைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

இதனால், தங்களின் முதன்மைச் சந்தையான பாகிஸ்தானுக்கு திராட்சைகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஆப்கானிய விவசாயிகள் தவித்து வருகின்றனர். பழங்கள் அழுகுவதைத் தடுக்க, வேறு வழியின்றித் திராட்சைகளை உலர் திராட்சையாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளனர்.

ஆனால், உள்நாட்டுச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் உலர் திராட்சையின் விலையும் பாதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு 44 ஆயிரம் டன் திராட்சை ஏற்றுமதியான நிலையில், இந்த ஆண்டு வெறும் 256 டன் மட்டுமே ஏற்றுமதியாகி வர்த்தகம் முடங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.