;
Athirady Tamil News

அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து ; ஐந்து பேர் உயிரிழப்பு

0

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில், கும்புக்கன களுப்பாலம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம், எதிர்திசையில் இருந்து வந்த டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது டிரெய்லரில் 10 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்களாவர். அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மேலும் மூவர் தற்போது மொனராகலை வைத்தியசாலையில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் டிராக்டர் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.