;
Athirady Tamil News

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

0

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும்.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2027 டிசம்பர் 07 முதல் 2027 டிசம்பர் 17 வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.