;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிப்பு!

0
நிலவர அறிக்கை 2026.10.27 
பிற்பகல் 3.00 மணி
கடந்த இரு தினங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் அனர்த்தத்தினால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அனர்த்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கோப்பாய் பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், பருத்தித்துறை பிரதேசத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், கரவெட்டி பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளுக்கும் பகுதியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கோப்பாய் பிரதேசத்தில் 01 வீடும், பருத்தித்துறை பிரதேசத்தில் 7 வீடுகளும், கரவெட்டி பிரதேசத்தில் 01 வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும், கரவெட்டி பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.