;
Athirady Tamil News

இலங்கையில் அதிரடி கைதான இளம் சீன பெண் தொழிலதிபர்கள் ; அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்

0

77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்கிழமை (28) விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய சீன நாட்டுத் தொழிலதிபர்களாக உள்ள பெண்களாவர்.

சிகரெட் கொள்வனவு
இவர்கள் சீனாவில் இந்த சிகரெட்டுகளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரைச் சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எச் -497 என்ற விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கொண்டுவந்த 4 பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இரு சீனப் பெண்களையும் சுங்கப் பொறுப்பில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.