;
Athirady Tamil News

யாழில் இறைச்சியாக்க தயார் நிலையில் இருந்த மாடுகள் மற்றும் மாட்டிறைச்சி என்பன மீட்பு

0

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, பசுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 58 கிலோகிராம் மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோத கொல்களத்தினை நடத்தி வந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (29.08.2026) பதிவாகியுள்ளது.

பொலிஸாரால் முற்றுகை
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக கட்டப்பட்டிருந்த நிலையிலும், ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோகிராம் இறைச்சியையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.